அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31.5 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

TRB BEO Latest News in Tamil | டிஆர்பி வட்டார கல்வி அலுவலர் தேர்வு

TRB BEO Latest News in Tamil | டிஆர்பி வட்டார கல்வி அலுவலர் தேர்வு

TRB BEO Latest News in Tamil

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு 05.06.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 12.07.2023 மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கி ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள விரும்பினால் 13.07.2023 முதல் 17.07.2023 வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Read Also: மருத்துவ படிப்பு கட்டணம் உயர்வு

மேலும், திருத்தங்கள் (Edit Option) மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.

1.இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

2. விண்ணப்பதாரர்கள் விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள “சமர்ப்பி” (Submit) பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனில் செய்யப்பட்ட மாற்றங்கள்

3. கடைசியாக உள்ள “சமர்ப்பி” (Final Submit) பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், அன்னாரின் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

4. விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்பித்தப்பின் அதில் மாற்றங்களை செய்யக்கூடாது.

திருத்தம் (Edit Option) Option) மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் (Panel) உரிய திருத்தம் மேற்கொண்டபின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் (Fileds) திருத்தம் செய்யும்பொழுது, மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.

6. திருத்தம் (Edit Option) செய்த பின்னர் Print Preview Page சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் declaration-ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

7. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும்.

8. விண்ணப்பதாரர்கள் கைபேசி எண் (Mobile No), மின்னஞ்சல் முகவரி (E-mail ID)ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது.

9. இனம் (Community) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டண தொகையில் ஏற்படும் மாற்றங்களில் விண்ணப்பதாரரே பொறுப்பாவர்.

10. விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர், தேர்வுக்கான முழு கட்டணத் தொகையினை மீண்டும் செலுத்த வேண்டும்.

11. விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும்போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கனவே செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது.

மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Posts