டெட் தேர்வு எப்போது ? ஆகஸ்டு 25ம் தேதி துவங்கி - டிஆர்பி அறிவிப்பு
டெட் தேர்வு எப்போது ?
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவா் வெளியிட்ட பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஆசிரியர் தகுதி தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 01/2022, நாள் 7.3.2022 அன்று வெளியிட்டது.
READ ALSO THIS: TN TRB PG RESULT OUT 2022 | trb.tn.nic.in |
இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.4.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினி வழித்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்ட்டது. தற்போது ஆகஸ்டு மாதம் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள் – I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வா்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்டு இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TRB EXAM NOTIFICATION PDF - DOWNLOAD HERE