You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TRB Age Relaxation GO No 144 | டிஆர்பி ஆசிரியர் பணி வயது வரம்பு அரசாணை

TRB Age Relaxation GO

TRB Age Relaxation GO No 144 | டிஆர்பி ஆசிரியர் பணி வயது வரம்பு அரசாணை

டிஆர்பி ஆசிரியர் பணி வயது வரம்பு

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடி நியமனத்தில், சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் உச்ச வயது வரம்பு திமுக அரசு உயர்த்தியுள்ளது.

Also Read: Teacher Recruitment Board Address

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன்பிருந்த வயது வரம்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட 9.9.2021 நாளிட்ட அறிவிப்பில், கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டவாறு, பொதுப்பிரிவினருக்கு 40 எனவும், இதர பிரிவினருக்கு 45 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனால், சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாாியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வில், பணி நாடுநர்கள் பலர் வயது வரம்பு தாண்டியதால் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர். அதன்பின், அவர்கள் வயது வரம்பு நீட்டிக்க வேண்டும் என்று பத்திரிக்கைகள், ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை வைத்தனர். மேலும் முதல் அமைச்சர், கல்வி அமைச்சர் என சந்தித்து மனுக்கள் வழங்கியிருந்தனர்.

உயர்த்தப்பட்ட வயது வரம்பு என்ன

அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை பரிசீலித்து, ஆசிரியர் பணிநாடுநர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி சார் நிலை பணி விதிகள், தமிழ்நாடு பள்ளி கல்வி சார்நிலை பணி விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலை கல்விப்பணி விதிகளில்

ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பினை பொதுப்பிரிவினருக்கு 40லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45லிருந்து 50 ஆகவும் 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயித்து ஆணை வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்து அரசாணை எண் 144ஐ வெளியிட்டுள்ளது.

அரசாணையின்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 9.9.2021 அன்று வெளியிடபட்ட அறிவிக்கைக்கு இநு்து உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உயர்த்தப்பட்ட வயது வரம்பு 31.12.2022ம் ஆண்டு வரை மட்டும் பொருந்தும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை பதிவிறக்கம் செய்ய லிங்கை கிளிக் செய்யவும்