இன்றைய கல்வி தகவல் 2-2-2020
- பி.எட் பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் வரும் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
- உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு வெளியிடப்பட்டது. 5.26 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்ற நிலையில், 47,157 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை கல்வி நிறுவனங்களை வழங்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பு கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
- நேற்று நடந்த பொது பிரிவினருக்கான மருத்து கலந்தாய்வு 443 பேர் கலந்துகொண்டு கல்வி நிறுவனங்களை தேர்வு செய்தனா்.
- இருப்பிட சான்று பிரச்னையால், 4 மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கப்படவில்லை.
- சான்றிதழ் சரிபார்த்தபின், பேராசிரியர்கள் கல்வி சான்றிதழ்களை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் கலலூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
- தேர்வு நடத்தாமல், அரியர் தேர்வு முடிவை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கட்டணம் செலுத்த முடியாமல் வாய்ப்பை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு காலியிடத்தில், முன்னுரிமை அடிப்படையில் மருத்துவ இடம் ஒதுக்கப்படும் என தமிழக அரசு ஐகோர்ட் மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
- தற்போது உள்ள அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு உள்ள கல்வி தகுதி தமிழகத்தில் வேறு யாருக்கும் இல்லையா என திமுக கொள்கை பரப்பு செயலாளா் சபாபதி மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
- நீட் தேர்வில் வெற்றி பெற்றும், கலந்தாய்வு தேதி தெரியாததால் திருப்புவனம் அருகே உள்ள பழையனுர் அரசு பள்ளி மாணவியின் மருத்துவ கனவு கலைந்து போனது.
- மதுரை மேலூர் அருகே சேக்கிபட்டி ஊராட்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் ரூ.26.94 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி தரிசனம் நடந்தது.
- புயல் மற்றும் பருவநிலை மாற்றத்தினால், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் இளங்கலை மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- கோவை அரசு கலைக்கல்லூாியில் முதுகலையில் இறுதியாண்டு படிக்கும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் துவக்கம் என்று முதல்வர் சித்ரா தெரிவித்துள்ளார்.
- முறையாக சிகிச்சை அளிக்காததால், புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் ஒய்வு பெற்ற ஆசிரியர் இறந்ததாக கூறி, மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
- சேலம் மாவட்டம் கற்போம் எழுதுவோம் திட்டத்தில் 20,640 கல்லாதோர் பங்கேற்றுள்ளனர்.
- பணி நீட்டிப்பு வழங்காமல் பணியிலிருந்து நீக்கியதை கண்டித்து, தற்காலிக தச்சூர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- கலசபாக்கம் அடுத்துள்ள மேலராணி அரசு பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் ஆசிரியர்களால் மட்டும் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசினார்.
- பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவிடம் மனு அளித்தனர்.