புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி, திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள் 5வது நாளாக போரட்டம் நடத்தினர். நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 165 பேரை போலீசார் கைது செய்தனர். துணை மருத்துவ படிப்புகளுக்கு 9ம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிட்டிஸ் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள 336 கழிப்பறைகள் மேம்படுத்த உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். திட்டத்தின் மதிப்பீடு 92.25 கோடி ரூபாய். இந்த நிதி ஒதுக்கீட்டில் பள்ளிகளும் மேம்படுத்த உள்ளதாக அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் 100 சிறிய வகை செயற்கை கோள் ஏவப்படும் நிகழ்ச்சியில் திருப்போரூர் சேர்ந்த மாணவி ரவி-தேவி தம்பதியின் மகன் ஷர்மிளா பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளியை ேசர்ந்த சிறந்த 100 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கரின் மகன் ஆதித்யாவுக்கு (15) மொட்டை அடித்த பின் பாலாற்றில் குளிக்க சென்றபோது, எதிா்பாராதவிதமாக ஆற்று நீரில் சிக்கி உயரிழந்தான். திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவிதொகைக்கு பிப்ரவரி 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திருப்பூரில் நேற்று தெரிவித்தார். பள்ளிகளில் கொரோனா பாதிப்பு குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அதுபோன்று ஏதோ ஒரு இடத்தில் நடைபெறுகிறது, அதனை சுட்டிக்காட்டிவது பத்திரிக்கை தர்மம் அல்ல, இவ்வாறு அவர் கூறினார். கோவை மாவட்ட எஸ்.எஸ்.குளம் மாவட்ட கல்வி அலுவலராக விஜயேந்திரன் நேற்று பணியில் சோ்ந்தார். கல்வி கட்டணத்தை குறைக்ககோரி, பெருந்துறையில், மருத்துவ மாணவர்கள் இரண்டாவது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர். நாளை 9, 11ம் வகுப்பு மாணவா்களுக்கும், முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதால், தூய்மை பணி பள்ளி, கல்லூரிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுஜா சுவர்ணலட்சுமி, இவர் குருவராஜாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றும் இவரிடம், பணியிலிருந்து நேற்று முன்தினம் வீடுதிரும்பும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் 5 சவரன் தங்க சங்கலியை பறித்து சென்றனர். காவேரிபாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான தற்காப்பு போட்டிகளில் வெற்றிபெற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். அவர்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பாராட்டினார்.