தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. அது விரைவில் வழுப்பெறும். ெதன்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்ககூடும். இதனால் கடலோர பகுதிகளில் பலத்தகாற்று வீசூம்.
இதற்கிடையில் கனமழை எச்சரிக்கை தொடர்ந்து இன்று (26.11.2024) நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. புதுச்சேரியில் காைரக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.