Today rain holidays latest news in Tamil | மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
Today rain holidays latest news in Tamil
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோருக்கு கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், கனமழை காரணமாக இரண்டு மாவட்டங்களில் சில தாலுக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டாரங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், கடையம், கீழப்பாவூர் ஆகிய வட்டாரங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.