எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கல்வி உதவி தொகையை முடக்கினால் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு இடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு ஐகோர்ட்டில் உறுதி அளித்துள்ளது. பட்டியிலன, பழங்குடி மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை தொடந்து வழங்க உத்தரவிட வேண்டும் என பிரதமருக்கு திமுக பொருளாளர் டி.ஆர் பாலு வலியுறுத்தியுள்ளார். தொழில் கல்வி படிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து படிப்பு உதவி தொகை வழங்கப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான வழக்கில் உடனே தீர்வு காணப்பட வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளளார். உரிய சான்றிதழ் கிடைக்க காலதாமதம், அதிகாரிகள் அலட்சியத்தால், கரூர் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த சின்னதுரை மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பு பறிபோனது. புதுச்சேரி கோரிமேடு இந்திர நகரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கதவை உடைத்து கம்ப்யூட்டர், புரஜெக்டர் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். Read, Comment and Share. To receive education information promptly subscribe www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com