கல்வி நிறுவனங்கள் வரும் 7ம் தேதி முதல் செயல்படும் தமிழக அரசு அறிவிப்பு
மருத்துவ படிப்புகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டும்7.5 சதவீத நிபந்தனையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் இறுதிவரை பள்ளிகள் திறக்கக்கூடது என்று தாமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். முறைகேடுகளில் செய்யும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் கிளை கருத்து தொிவித்துள்ளது மருத்துவ கல்லுாிகளில் கட்டணம் செலுத்த முடியாத அரசுப்பள்ளி மாணவர்களை மீண்டும் சேர்க்கை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பிற்கான சிறப்பு இடஒதுக்கீட்டிற்கான நேரடி கலந்தாய்வு நேற்று துவங்கியது. 50 பேர் சேர்ந்தனர். அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு செல்லும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மாணவர் சிலர் அண்ணா பல்கலை தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். உள்கட்டமைப்பு வசதியில்லாத காஞ்சிபுரம், திருவள்ளூர் திறக்க வேண்டாமே என அரசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது. 7.5 உள்ஒதுக்கீட்டில் மருத்து படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணம் செலுத்த 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான புகார் விபரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது சிவகாசி பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பூச்சியியல் துறை உதவி பேராசிரியராக அறிவுடை நம்பி மயங்கி விழுந்து, சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆசிரியர் பணிக்கான வயது உச்ச வரம்பை ரத்து செய்யக்கோரியும், விரைவில் அரசு பணி வழங்க கோரியும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர் காரைக்குடி கீழ ஊரணியில் செயல்படும் அங்கன்வாடி மையம் மதுபாராக மாறி குடிமகன்களிடம் சிக்கி தவிக்கிறது. கொரோனா மாவட்ட விழிப்புணர்வு போட்டி சாயல்குடி அரசு பள்ளி முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபியில் சிறுமிகளை ஆபாசமாக படம்பிடித்து பேஸ்புக்கில் பதிவிட்ட பாலிடெக்னிக் மாணவரை போலீசார் கைது செய்தனர். சீர்காழி அருகே அரசு பள்ளி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியரை பெற்றோர்கள் எதிா்ப்பால் முதன்மை கல்வி அதிகாரி குணசேகரன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். திருவாரூர் மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள சமையலர், துப்பரவாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 3.19 லட்சம் பேர் கல்வி பெறாதவர்கள் உள்ளனர் என தொியவந்துள்ளது. டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவ அமைப்பினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்்பாட்டம் செய்தனர். உயர்கல்விக்கான உதவித்தொகை பெறும் மாணவர்களின் வங்கி கணக்கில் குளறுபடி உள்ளதாகவும், அதனை உடனடியாக திருத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழ அறிவுறுத்தியுள்ளது. மாணவா் நலனுக்காக பள்ளி திறக்க வேண்டும் என தனியார் பள்ளி சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சேத்தியாதோப்பு அரசு உயா்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்்த்துமாறு பெற்றோர் கோரிக்கை. ஆறு மாதம் பின்பு கடலுர் அண்ணா விளையாட்டு அரங்கம் திறப்பு. விழுப்புரம் தலைைம ஆசிரியர் வீட்டில் 1 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை.