tnvelaivaaaippu.gov.in| வேலை வாய்ப்பு பதிவு பள்ளிகளில் அடியோடு நிறுத்தம், ஷாக்...
tnvelaivaaaippu.gov.in
வேலைவாய்ப்பு பதிவுகள் இனி பள்ளிகளில் செய்யப்படமாட்டாது என்று வேலை வாய்ப்பு துறை அறிவித்துள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பு படித்த முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போது, அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் மதிப்பெண் சான்றிதழில் வழங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், இந்தாண்டு முதல் பள்ளிகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்துகொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.
READ ALSO THIS: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் சிக்கல்? நீதிமன்றத்தில் திடீர் வழக்கு
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் ேவலை வாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம் 2011ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்பவர்களுக்கு பதிவு அட்டை வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான
www.tnvelaivaaaippu.gov.in என்ற முகவரியில் நேரடியாக பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இ- சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பெற்றோர் மத்தியில் அதிர்ச்சிைய ஏற்படுத்தி உள்ளது. முந்தைய மாணவர்கள் எவ்வித இடையூறு இல்லாமல் தங்களது வேலை வாய்ப்பு பதிவினை அந்த பள்ளிகளில் செய்துகொண்டர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களும் வேலை வாய்ப்பில் பதிவு செய்தனரா என்று உறுதி செய்தனர். தற்போது இது ரத்து செய்யப்பட்டதால், எவ்வித வழிகாட்டுதல் இன்றி, பல பள்ளிகளில் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க முடியாமல் போகும். எனவே, பள்ளிகளில் இதனை தொடர வேண்டும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.