You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் பொது தேர்வு 2022க்கான 3,552 இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கான அறிவிக்கை நாளை (30.6.2022) அன்று வெளியிடப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக் முடியும்
இணையவழி விண்ணப்பம் விண்ணப்பிக்க துவங்கும் நாள் 7.7.2022
இணையவழி விண்ணப்பம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15.8.2022
இவ்வாரியம் முதன் முறையாக தமிழ் மொழி தகுதித்தேர்வை அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி காவலர் பொது தேத்வு 2022 நடத்தவிருக்கிறது.
இவ்வாரியத்தில் 7.7.2022 முதல் 15.8.2022 வரை கட்டுப்பாட்டு அறையில் உதவி மையம் வாரத்தின் ஏழு நாட்களுக்கு செயல்படும். இதேபோன்று உதவி மையங்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும், அலுவலக பணி நேரத்தில் செயல்படும் இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள்/தெளிவுகளுக்கு இந்த உதவி மையத்தில் சேவைகளை பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பதாரா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
READ ALSO THIS: TNPSC EXAM TENATIVE KEYS RELESEAD
மேற்படி தேர்வுக்கான தகுதி, அளவுகோல், தோ்வு செயல்முறை, மற்றும் எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம் போன்ற கூடுதல் விவரங்கள் இவ்வாரிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
(தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899.) இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.