TNTET Teachers Genuineness Certificate | ஆசிரியர் தகுதி தேர்வு தோ்ச்சிக்கு உண்மைதன்மை அவசியம்
TNTET Teachers Genuineness Certificate
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, முதலமைச்சர் தனிப்பிரிவு மாவட்ட ஆட்சியரகத்திற்கு அனுப்பிய கடிதம்.
Read Also: NHIS Contact Number
அதில், மனுதாரரான சையது இஸ்மாயில் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒரு தகவல் கேட்டிருந்தார். அதில், முதலமைச்சர் தனிப்பிரிவு மனு, ஆசிரியர் தகுதித்தேர்வில் TNTET தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் மூலம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பத்தாண்டுகள் பணியாற்றி தேர்வு நிலை பெறும்போது, TNTET தேர்ச்சி சான்றிதழுக்கு உண்மைதன்மை சான்று பெற வேண்டுமா
மனுதாரருக்கு அனுப்பப்பட்ட பதிலில், "2012ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் (TNTET) தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் மூலம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பத்தாண்டுகள் பணியாற்றி தேர்வுநிலை பெறும்போது TNTET தேர்ச்சி சான்றிதழுக்கு உண்மைதன்மை சான்று பெற வேண்டும்", என்று விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.