Read Also: 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் பள்ளி, கல்லூரிகளில் நிரப்பு முடிவு
ஆசிாியர் தேர்வுக்காக தகுதிச்சான்றிதழை ஆயுள் காலத் தகுதிச்சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும் என இரண்டு தேர்தவ் வாக்குறுதிகளை திமுக கொடுத்தது. இதில் இரண்டாவது வாக்குறுதியான ஆசிரியர் தகுதிச் சான்றிதழை ஆயுள்காலத் தகுதி சான்றிதழாக மத்திய அரசே மாற்றி அறிவித்துவிட்டது. அதற்கான அறிவுரைகளும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், முதல் வாக்குறுதியை திமுக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. இதனை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்திவிட்டனர். மாநில அரசின் அதிகார வரம்புக்கு உள்பட்ட இந்த வாக்குறுதியைக் கூட திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை வாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.