TNTET Exam Result Out 2022 | TNTET Paper -1 Result Out 2022
TNTET Exam Result Out 2022
ஆசிரியர் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022, நாள் 07.03.2022 ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I ற்கான கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) 14.10.2022 முதல் 19.10.2022 வரை காலை / மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது. இத்தேர்வில் 1,53,533 தேர்வர்கள் கலந்து கொண்டனர். தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative key Answer) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.nic.in-ல் 28.10.2022 அன்று வெளிடயிடப்பட்டது.
தற்காலிக விடைக்குறிப்பிற்கு 28.10.2022 முதல் 31.10.2022 பிற்பகல் 5.30 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபனைகளை (Objection) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்காண் தேதியில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குபின் பாட வல்லுநர்குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களது கணினி வழித் தேர்வினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.
Read Also: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேரடி நியமனம்
தற்பொழுது தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புடன் வெளிடயிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.