You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

டெட் தோ்வு நேரடி பயிற்சி தேதி, இடம் முழு விவரம்

TNTET direct training details released

டெட் தோ்வு நேரடி பயிற்சி தேதி, இடம் முழு விவரம்

 

பள்ளி கல்வித்துறை, ஆசிாியர் தகுதித் தேர்வு நேரடி பயிற்சிக்கான தேதி மற்றும் பிற விவரங்களை வெளியிட்டுள்ளது. 

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தற்போது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான  சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வினை வரும் டிசம்பர் 2026ஆம் ஆண்டில் எழுத உள்ளனர். இந்த தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெறும். 

அதன்படி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு எதிர்கொள்ளும் வகையில் நேரடி பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

Read Also: சிறப்பு டெட் தேர்வு பயிற்சி அளிக்க கல்வித்துறை உத்தரவு

டெட் தோ்வு நேரடி பயிற்சி தேதி, இடம் 

இந்த நேரடி பயிற்சி பள்ளி பணிகள் பாதிக்காவண்ணம் ஆசிரியர்களின் வசதிக்கேற்றவாறு, சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை நாட்களில் நடைபெறுகிறது. இந்த பயிற்சி அந்தந்த மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்பட உள்ளது. 

31.10.2026 / 1.11.2026/ 7.11.2026/ 8.11.2026/ 14.11.2026/ 15.11.2026/ 21.11.2026/ 28.11.2026/ 5.12.2026/ 12.12.2026. 

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் இப்பயிற்சி பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இந்த பயிற்சியை புகார் ஏற்படாத வண்ணம் வழங்க வேண்டும் எனவும், பயிற்சி முடிந்தவுடன் அதன் அறிக்கையை பள்ளி கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.