தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து வட்டார கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம் : அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஓழுங்குமுறை மற்றும் மேல்முறையீடு) விதிகளில் 17-பி விதியின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம், விசாரணை அறிக்கை பெறப்பட்ட விவரம் மற்றும் இறுதி ஆணை வழங்கப்பட்ட விவரங்களை அந்தந்த வட்டார கல்வி அதிகாரிகள் தயாரித்து மார்ச் 2ம் தேதி துறை இயக்குனரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.