You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNPSC Today Latest News | டிஎன்பிஎஸ்சி இன்றைய செய்தி

TNPSC BEO Exam Latest News

TNPSC Today Latest News | டிஎன்பிஎஸ்சி இன்றைய செய்தி

TNPSC Today Latest News

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலா் அஜய் யாதவ் வெயியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 16/2022 நாள் 21.7.2022இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான தோ்வு -1 (தொகுதி – - 1) இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள் 21.7.2023 மாலை 5.45 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை(தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில்) மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தோ்வாணைய இணையதளத்தில் தெரிவிக்க்கப்பட்டுள்ள இ- சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள், அவ்வாறு தவறும்பட்சத்தில், அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.