தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) சற்று முன் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 2020க்கான துறை தேர்வுகள் 14.2.2021 முதவ் 21.02.2021 வரை நடந்தது. அத்துறை தேர்வுகளில் இரண்டாம் நிலை மொழி (எழுத்து) தேர்விற்கான தோ்வு முடிவுகள் 9.4.2021 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்து. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழி தேர்வு கொரோனா காரணமாக தாமதமான நிலையில், தற்போது 7 மையங்களில் நடக்கிறது. நடைபெறும் மையம் விவரம் மதுரை - 9.7.2021, கோவை - 12.7.2021 மற்றும் 13.7.201, கிருஷ்ணகிரி - 16.7.2021, வேலூர் - 16.7.2021, திருவள்ளூர் - 17.07.2021 மற்றும் 26.7.2021 மற்றும் 27.7.2021.