TNPSC Tamil Medium Certificate | தமிழ்வழி சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும்
TNPSC Tamil Medium Certificate
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிக்கை,
கடந்த ஜனவரி 3ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 1 பணிகளுக்கான முதல் நிலை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுள், தமிழ் வழி பயின்றுள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதிகளை தமிழ்வழி பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் வரும் 5ம் தேதி வெளியிடபடவுள்ள உரிய படிவத்தில் 16ம் தேதி முதல் அடுத்த மாதம் 16ம் தேதி வரை (வேலை நாட்களில்) ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நடத்தும் அரசு இ - சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யலாம்.
அதாவது, பள்ளி முதல் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரையும், மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டயபடிப்பு, பட்டப்படிப்பு தமிழ்வழி பயின்றதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.