டிஎன்பிஎஸ்சி நிலை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
டிஎன்பிஎஸ்சி
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணிகளில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியார்ட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் தொடரப்பட்ட நீமதின்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டிஎன்பிஎஸ்சி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த மே 9ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் தரப்பில் வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
READ ALSO THIS: TNPSC EXAM TENTATIVE KEYS RELEASED
அதில், மதிப்பெண், சீனியாா்ட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் நீதிமன்ற உத்தரவுப்படி அனைவருக்கும் மதிப்பெண் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது என்பது கண்டிப்பாக சாத்தியமில்லை. அதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பினும், மதிப்பெண் சீனியாரிட்டி கேட்டு கடந்த 1996ம் ஆண்டு வழக்கு தொடர்ந்த பிரிவினருக்கு மட்டுமே அதன் அடிப்படையில் பதவி உயர்வை கடைப்பிடிக்கிறோம். அதே வேளையில், டிஎன்பிஎஸ்சி மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை 2021ம் ஆண்டு முதல் கணக்கிட்டு, வரும் காலங்களில் தொடர்ந்து பதவி உயர்வு வழங்குகிறோம்,
என தெரிவிக்கப்பட்டுள்ளது.