TNPSC Schedule 2024 | டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு அட்டவணை வெளியிடும் தேதி
TNPSC Schedule 2024
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாவணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது.
குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கான ஆண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தோ்வ அட்டவணை வரும் டிசம்பர் 15ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ஆயிரம் பணிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் எனக்கூறப்படுகிறது. 30 வகையான போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.