TNPSC Oral Test in Tamil | டிஎன்பிஎஸ்சி நேர்முக தேர்வு விவரம்
TNPSC Oral Test in Tamil
தமிழ்நாடு அரசு பணியாளர் தோ்வாணையம் 15.9.2022 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடர்பான நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை மேம்படுத்தும் விதமாக அதன் நடைமுறைகளில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நோ்முகத் தேர்வுகளுக்கு (oral test) அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர், நிழற்படம், பிறந்த தேதி உள்ளிட்ட அடையாளர்கள் மறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக விண்ணப்பதாரர்கள் A B C D முதலான எழுத்துகளை கொண்டு குறியீடு செய்து நோ்காணல் அறைகளுக்குள் (Interview boards) அனுமதிக்கப்படுவீர். இப்புதிய நடைமுறைகளுடன் ஏற்கனவே உள்ள Random Shuffling முறையும் சேர்த்து பின்பற்றப்பட உள்ளதால் விண்ணப்பதாரர்கள் மீது சார்பு தன்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நீக்கப்படுவதுடன் வெளிப்படை தன்மை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.