TNPSC Notification 2021 | 531 அரசு பணியிடங்களுக்கு தேர்வு | ஏப்ரல் 4ம் தேதி விண்ணப்பிக்கலாம்
அரசு துறையில் காலியாக உள்ள 531 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு ஜூன் 6ம் தேதி தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
TNPSC Notification 2021
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 813, பொதுப்பணி துறையில் 348 இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்கள், கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல் துறையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் ஒரு பணியிடம், மீன்வளத்துறையில் இளநிலை பொறியாளர் 5 பணியிடங்களுக்கு தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் கடந்த 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
இதில் இளநிலை வரை தொழில் அலுவலர், இளநிலை பொறியாளர் பணிக்கு டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்து இருக்க வேண்டும் அல்லது மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் படித்து இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.150, எஸ்சி. எஸ்டி மாற்றுதிறனாளிகள், விதவைகள் பிரிவினருக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் விண்ணப்பிப்வர்களுக்கு வரும் ஜூன் 6ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு சென்னை, திருச்சி, நெல்லை, கோவை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மையங்களில் தேர்வு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.