தமிழ்நாடு அரசு டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி அமைப்புக்கு நிரந்தர தலைவர் பணியிடம் என்பது காலியாகவே உள்ளது. உறுப்பினர் அவர்களே தலைவர் பணியிடத்தை கூடுதலாகவே கவனித்து வருகிறார். டிஎன்பிஎஸ்சி அமைப்பில் மொத்தம் 14 உறுப்பினர்கள் இருப்பர். இதில் பல மாதங்களாக எட்டு உறுப்பினர் பணியிடங்கள் காலியாகவே இருந்தது. இன்றைய தேதியில் ஐந்து உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவனருள், ஐஆர்எஸ் அதிகாரி சரவணக்குமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார் மற்றும் முனைவர் பிரேம்குமார் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று உறுப்பினர் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது. 2 ஆண்டுகள் கழித்து இந்த நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் அல்லது அவரது 62 வயது எது முதலில் பூர்த்தியாகிறதோ அது வரை அவர்கள் இந்த பணியிடங்களில் தொடர்வார்கள்.