பள்ளிகல்வித்துறை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
அதில், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் 2012 - 2013 கல்வி ஆண்டில் நடுநிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 1,764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, அப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பப்பட்டது. 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 1.4.2021 பணிந்தனுப்பப்பட்டதில், கூடுதல் தகவல் கோரப்படுகிறது. மாவட்டம், பள்ளி, அலுவகம் பெயர், 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களில் நிரப்பப்பட்டுள்ள பணியிடங்கள் எத்தனை, எந்த தேதி முதல் காலியாக உள்ளது விவரம், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் விவரம் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் டிஎன்பிஎஸ்சி அனுப்பப்பட்டு, அதன் மூலம் பணியிடங்கள் நிரப்பவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.