You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNPSC Latest News | இளநிலை பொறியாளர் இளநிலை வரைவாளர் கலந்தாய்வு ஜூலை 28ம் தேதி நடக்கிறது

TNPSC BEO Exam Latest News

TNPSC Latest News | இளநிலை பொறியாளர் இளநிலை வரைவாளர் கலந்தாய்வு ஜூலை 28ம் தேதி நடக்கிறது  

TNPSC Latest News

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சற்று முன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது,

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம், 5.3.2021 நாளிட்ட அறிவிக்கை எண் 06/2021-ன் வாயிலாக விண்ணப்பங்களை கோரியிருந்தது. இந்த பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 18.09.2021 அன்று நடைபெற்றது. எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 15.2.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

மீன்வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணித்துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய தெரிவுகள் தொடர்பான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் உள்ள தேர்வாணையம் அலுவலகத்தில் வரும் 28ம் தேதி நடக்கிறது.

Also Read: Group 4 Hall Ticket Download Direct Link tnpsc.gov.in

மூலச்சான்றிதழ்கள் சாிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள்/ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி மற்றும் காலிபணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம், மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். இதற்கான அழைப்பாணை தனியே தபால் வழியே அனுப்பப்படமாட்டாது.

இதில் பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள்/ஒட்டுமொத்த தரவரிசை/இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிபணியிடங்களுக்க ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கலந்தாய்விற்கு வர தவறினால், அவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு செயலாளர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.