தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் சற்று முன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், தமிழ்நாடு கூட்டுறவுப் பணியில் அடங்கிய கூட்டுறவுத் தணிக்கை துறையில் உதவி இயக்குனர் பதவி தெரிவுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இத்தெரிவிற்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு (இரண்டாம் கட்டம்) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல், தேர்வாணைய வலைதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டது. மேலும் நேர்முகத் தோ்வு வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.