தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை 01/2024, நாள் 30.01.2024 இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு TV (தொகுதி IV) பணிகளில் அடங்கிய ஓட்டுநா் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான உடற்தகுதித்தேர்வு மற்றும் நடைச்சோதனை 24.03.2025 மற்றும் 25.03.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தகவல் அவ்விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள குறிப்பாணையை பதிவிறக்கம் செய்து மேற்குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட இடத்தில் உடற்தகுதித் தேர்வு மற்றும் நடைச்சோதனையில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.