Read Also: ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய்யாதவ் வெளியிட்ட அறிவிப்பு – தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சமூக நலம் மற்றும் மகளிர் துறையில் அடங்கிய உதவி இயக்குனர் (பெண்கள் மட்டும்) பதவியில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு கடந்த 5.11.2022 அன்று கணினி வழித்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 1444 பேர் கலந்துகொண்டனர். இத்தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு 30 பேர் தற்காலிக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்முக தேர்வு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.