தமிழ்நாடு அரசு பணியாளர் தோ்வாணையம் அறிவிக்கை எண் 8/2024 நாள் 20.6.2024 இன் வாயிலான ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வுகள் II (தொகுதி –- II மற்றும் II A) பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு இணையவழி விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் 19.07.2024 11.59 பிப என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொழில்நுட்ப காரணங்களால் இணைய வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால், தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் 20.7.2024 11.50 பி.ப வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.