TNPSC Latest News 2023 | சுகாதார அலுவலர் பதவி ஹால்டிக்கெட் பதவிறக்கம் செய்யலாம்
TNPSC Latest News 2023
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
13.2.2023 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித்தேர்வு.
செய்திக்குறிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 31.2022 நாள் 21.10.2022ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத்தேர்வு 13.2.2023 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது.
Read Also: டிஎன்பிஎஸ்சி நூலகர் வேலை வாய்ப்பு
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிசீட்டுகள் (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணையதளங்களான
www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவின் தன்விவரப்பக்கம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.