TNPSC Latest News | ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி
TNPSC Latest News
ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசாரணை நிலை எண் 248, உயர்கல்வி (f2) த்துதுறை நாள் 8.11.2022ன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர்கள் 2331 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிக்கை (அறிவிக்கை எண் 12/2019 நாள் 28.8.2019 மற்றும் 4.10.2019) ரத்து செய்யப்பட்டு, தற்போது 4000 உதவி பேராசிரியர் காலிபணியிடங்களுக்கான புதிய அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.
Read Also: கணினி வழித்தேர்வு புதிய அறிவிப்பு
இதனையடுத்து, 2331 உதவி பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை (அறிவிக்கை எண்.12/2019 நாள்.28.8.2019 மற்றும் 4.10.2019) அரசாணை நிலை எண் 248, உயர்கல்வி (F2)த்துறை, நாள் 8.11.2022ன்படி ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.