TNPSC Latest News | கணினி வழித்தேர்வு புதிய அறிவிப்பு
TNPSC Latest News
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சற்று முன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
Read Also: வனத்தொழில் பழகுநர் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 14.9.2022 ஆம் நாளிட்ட அறிவிக்கை எண் 25/2022இல் 22.12.2022 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில், ஏழு தேர்வு மையங்களில் எழுத்து/கணினிவழித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான தேர்வானது 26.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், இராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளுர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய 24 தோ்வு மையங்களில் கணின் வழித்தேர்வாக (சிபிடி முறை) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.