TNPSC Important Notification 2022 | வனத்தொழில் பழகுநர் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு
TNPSC Important Notification 2022
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 20/2022 நாள் 8.8.2022ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு வன சார்நிலை பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி – VI) பதவிக்கான கொள்குறி வகை தேர்வு 4.12.2022 முற்பகல் தாள் – I, OMR முைறயிலும் தாள் – இரண்டு மற்றும் தாள் - மூன்று, கணினி வழித் தேர்வாகவும் 5.12.2022 முதல் 10.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகல் 11.12.2022 முற்பகல் 07 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
Read Also: 1.30 லட்சம் தேர்வர்கள் ஆப்சென்ட்
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுைழவு சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணைய தளங்களான
www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்ததேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை ஹால்டிக்கெட் பதவிறக்கம் செய்ய முடியும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.