செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது 38 மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளி் நடத்தப்பட்டு வருகின்றன.
இத்தன்னார்வ, பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் ஆண்டுத்தோறும் 20000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பிைன பெற்றுள்ளனர். Read Also: தமிழக அரசு போட்டித் தேர்வு, தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்தப்படவுள்ள தொகுதி 4 தேர்விற்கு 6,244 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு மைய அலுவலகங்களில் சிறந்த மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்ற அரசு வேலையை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையின் ஆணையர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார், இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.