TNPSC Group II Exam Latest News | குரூப் 2 தேர்வு ரத்து செய்க
TNPSC Group II Exam Latest News
குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக அதிர்ச்சி தகவலும் பரவி வருகிறது. இதற்கு டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழக அரசின் அலட்சியமே காரணம். பல்ேவறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு, மாற்று தேதியில் புதிய தேர்வு நடத்த வேண்டும்.
Read Also: குரூப் 4 தேர்வு முடிவு மார்ச்சில் வெளியாகும்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் குரூப் 2 முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக துவங்கியதும. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்துக்கும், தாமததத்துக்கும் காரணம். பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது. எனவே, இத்தேர்வை ரத்து செய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்து, வேறு ஒருநாளில் இத்தேர்வை டிஎன்பிஸ்சி மீண்டும் நடத்த வேண்டும்.
அமுமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் குளறுபடிகளில் என்ற செய்தி 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் தேர்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. தமிழக இளைஞர்களின் அரசு வேலை எனும் எதிர்காலம் பாதிக்கப்படாதவாறு குளறுபடி இன்றி புதிய தேர்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.