TNPSC Group 4 Result Date | குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது
TNPSC Group 4 Result Date
மாத இறுதியில் குரூப் 2, குரூப் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று
அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளில் குரூப்2 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டு கடந்த மே 21ம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சத்து 890 பேர் எழுதியிருந்தனர். 5,417 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
Read Also: டிஎன்பிஎஸ்சி தேர்வு இலவச பயிற்சி
இதேபோன்று குரூப் 4 தொகுதியில் 7,301 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 477 பேர் எழுதியிருந்தனர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அரசு வேலை வாய்ப்புகளில் மகளிருக்கு 30 சதவீத இடஒதுக்கீடுவழங்க சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, மகளிருக்கு முதலில் இடஒதுக்கீடு வழங்கப்படும். நீதிமன்ற உத்தரவுப்படி இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளதால், அதுகுறித்த பணிகளை அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.
இதனால் குரூப் 2, குரூப் 4தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிறிது தாமதம் ஏற்பட்டு வருகிறது. தேர்வு முடிவுகள் அக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Source : Dinamani - 23.10.2022)