TNPSC Group 2 latest news in Tamil | குரூப் 2 தேர்வு டிஎன்பிஎஸ்சிக்கு புதிய சிக்கல்
TNPSC Group 2 latest news in Tamil
குரூப் 2, குரூப்2ஏ பணிக்கான இரண்டாம் நிலை பொது அறிவுத்தேர்வில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக கண்காணிப்பு கேமரா, வீடியோ பதிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையச் செயலா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சனிக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா தாக்கல் செய்த மனு, நான் பிஏ தமிழ் படிப்பு முடித்திருக்கிறேன். குரூப் 2, குரூப்2ஏ பணிகளுக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற, எனக்கு பிரதான தேர்வு எழுத தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்தது.
இரண்டாம் நிலை பிரதான தேர்வு மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. தேர்வு அறையில் என்னைபோல சிலருக்கு வினாத்தாள் மாறியிருந்தது. இதுதொடர்பாக புகாரையடுத்து, ஒரு மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கியது. இந்த இடைப்பட்ட நேரத்தில் பலர் கைப்பேசிகளை பயன்படுத்தியும், புத்தகங்களிலிருந்தும் கேள்விக்கான பதில்களை தெரிந்துகொண்டனர்.
Read Also: டிஎன்பிஸ்சி குரூப் 2 மறுதேர்வு நடத்த வாய்ப்பில்லை
இதற்கிடையில் தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு, காலை 10.44 மணிக்கு தோ்வு தொடங்கி பிற்பகல் 1.45 மணிக்கு முடிந்தது. இதைபோல அன்றைய தினம் பிற்பகலில் நடைபெற்ற பொது அறிவு தே்ாவுக்காக பிற்பகல் 2.15 மணிக்கு அறைக்கு சென்றேன். ஆனால், தேர்வு நடத்தும் அலுவலர் பிற்பகல் 2.30 மணிக்கு தேர்வு அறைக்கு வந்து வினாத்தாளுடன் இணைக்கப்பட்ட விடைத்தாள் வழங்கினார். வினாத்தாளை வாசிப்பதற்கான 15 நிமிட கால அவகாசம் வழங்கப்படவில்லை. அதேநேரம் மாலை 5.30 மணிக்கு தேர்வு முடிக்கப்பட்டு தேர்வர்களின் விடைத்தாள்களை அறை கண்காணிப்பாளர் பெற்றுக்கொண்டனர்.
ஆனால், வெளியில் வந்து பார்த்தபோது, மற்ற அறைகளில் இருந்த தேர்வர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். கூடுதல் நேரம் வழங்கப்பட்டதுடன் காரணமாக அவர்களுக்கு மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அன்றைய தினம் கலை தமிழ்த் தேர்வில் நடைபெற்ற குழப்பத்தால் பிற்பகலில் நடைபெற்ற தேர்வுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டதாக தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவறாக புரிந்துகொண்ட பல்வேறு தேர்வு நடத்தும் அலுவலர்கள் பிற்பகலில் நடைபெற்ற பொது அறிவுத்தேர்வில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் 3 மணி நேரம், 3.30 மணி நேரம் என வேறுபட்ட நேரங்களில் தேர்வு எழுத அனுமதித்தனர். இதனால், என் போன்றோருக்கு மதிப்பெண் வித்தியாசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இத்தேர்வை ரத்து செய்து, மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும், இவ்வாறு அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை சனிக்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவில், குரூப் 2, குரூப்2ஏ பணிக்கான இரண்டாம் நிலை பொது அறிவுத்தேர்வில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக கண்காணிப்பு கேமரா, விடியோ பதிவுகளை தேர்வாணையச் செயலர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றார்.