TNPSC Free Coaching in Dharmapuri | டிஎன்பிஎஸ்சி தேர்வு இலவச பயிற்சி
TNPSC Free Coaching in Dharmapuri
தா்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக, பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
Read Also: டிஎன்பிஎஸ்சி செய்தியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தற்போது தர்மபுரி மாவட்ட வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி சர்வேயர் தேர்விற்கான 1098 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இலவச பயிற்சி வெள்ளி (23.9.2022) தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் காலை 10 மணி முதல் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல் கேட்டு பெறலாம். தகுதி வாய்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(News sources : Tami Murasu Evening Paper / 22.9.2022)