TNPSC EXAM TENATIVE KEYS RELESEAD – டிஎன்பிஎஸ்சி தேர்வு உத்தேச விடை வெளியீடு
TNPSC EXAM TENATIVE KEYS RELESEAD – டிஎன்பிஎஸ்சி தேர்வு உத்தேச விடை வெளியீடு
தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் 613/2022, நாள் 4.4.2022 – இன் படி அறிவிக்கப்பட்ட 151 துறை தேர்வுகள் கடந்த 6.6.2022 முதல் 14.6.2022 வரை கொள்குறிவகை, விரிந்துரைக்கும் வகை, கொள்குறி வகை மற்றும் விரைந்துரைக்கும் வகை என்ற புதிய பாடத்திட்டத்தின்படி சென்னை மற்றும் டெல்லி உள்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றன.
இத்தேர்வின் கொள்குறி வகை சார்ந்த 122 தேர்வுகளின் உத்தேச விடைகள் தேர்வாணையம் இணையதளத்தில் இன்று (ஜூன் 28ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது.
Read Also This: TNPSC MATERIALS PDF DOWNLOAD | TNPSC MODEL QUESTION PAPER
துறை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுதிய கொள்குறி வகை தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் 29.6.2022 முதல் 5.7.2022 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விைட போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு
contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதாரரின் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால் அத்தகவல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.