டிஎன்பிஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 1033 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு அறிவிப்பு மே 31ல் வெளியிடப்பட்டது. மொத்தம் 92509 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
அவர்களுக்கு பாடவாரியான போட்டி தேர்வு கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது. தமிழ்மொழி தகுதித்தேர்வு, பொதுத்தேர்வு, திறன் தேர்வு, மொழிப்பெயர்ப்பு தேர்வு நேற்று காலை மற்றும் மாைலயில் நடந்தது. தமிழகம் முழுவதும் 92,509 பேர் தேர்வு விண்ணப்பித்த நிலையில், 48627 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.மொத்தம் 43,882 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 47.44 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்காதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அனைத்த நிலைப்போட்டி தேர்வர்கள் சங்கத்தலைவர் கலீல் பாஷா கூறுகையில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் தமிழ்மொழி தகுதி தேர்வை 47 சதவீதம் பேர் எழுதாது டிஎன்பிஸ்சி நிர்வாகத்தின் மீது போட்டி தேர்வர்களுக்கு நம்பிக்லை இல்லாததை காட்டுகிறது, என்றார்.