You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNPSC BEO Exam Latest News | வட்டார கல்வி அலுவலர் தேர்வு விடைகுறிப்பு வெளியீடு

TNPSC Latest News

TNPSC BEO Exam Latest News | வட்டார கல்வி அலுவலர் தேர்வு விடைகுறிப்பு வெளியீடு

TNPSC BEO Exam Latest News

அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,  வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான 2023 - ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 01 / 2023. நாள்.05.06.2023-ன்படி 10.09.2023 அன்று ஒளியியல் குறி அங்கீகாரம் (Optical Mark Recognition (OMR)) மூலம் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது போட்டித் தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answers) வினாத்தாள் '4' வகைக்குரியது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 03.10.2023 முதல் 10.10.2023_பிற்பகல், 05.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும். தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது. அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் (Standard Text Books) ஆதாரம் மட்டுமே அளிக்கவேண்டும். கையேடுகள் (Guides, Notes) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தேர்வர்கள் வினாத்தாள்

("A" தற்காலிக series question paper) விடைக்குறிப்பிற்கு TRB wehsite-ல் இணையவழியில் வெளியிடப்பட்டுள்ளதற்குரிய ஆட்சேபணை (objection) தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு முற்றிலுமாக நிராகரிக்கப்படும். ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இவையனைத்தும் மாற்றுத் திறன் படைத்த தேர்வர்கள் (PWD candidates) பகுதி-B-ல் வினா எண் 31 முதல் 180 வரை உள்ள வினாக்களுக்கு மட்டுமே ஆட்சேபனை தெரிவிக்கலாம். பகுதி-4-ல் உள்ள 01 முதல் 31 வரையிலான கட்டாயத் தமிழ் மொழி பகுதியின் வினாக்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் மாற்றுத் திறன் படைத்த தேர்வர்கள் (PWD candidates) தெரிவிக்கக் கூடாது. மேலும், பாடவல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.