பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மார்ச் 2025ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ்2) பொது தேர்வு முடிவுகள் கல்வித்துறை அமைச்சர் மே 8ஆம் தேதி வியாழக்கிழமை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் காலை 9 மணிக்கு வெளியிடுகிறார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள இணையதள முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, http://resultsdigilocker.gov.in and www.tnresults.nic.in என்ற முகவரியில் சென்று, தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ேதர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி எஸ்எம்எஸ் வழங்கிய தேர்வு முடிவுகள் அனுப்படும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.