பொது சேமநல நிதி, ஆசிாியர் சேமநல நிதிக்கான கணக்கு அறிக்கை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, முதுநிலை துணை மாநில கணக்காயர் தினகரன் தெரிவித்துள்ளார்.
முதுநிலை துணை மாநில கணக்கு (நிதி) என் தினகரன் வெளியிட்ட அறிவிப்பு, தமிழக அரசு பணி நிலை சாா்ந்த அனைத்து இந்திய அரசு அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் பொது சேமநல நிதி 2020-2021ம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைதளத்தில் www.agae.tn.nic.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொது சேமநல நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்று சந்தாதாரர்கள் இந்த வலைதளத்தில் இருந்து தங்களின் 2020-21 வருடாந்திர கணக்கு அறிக்கையை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த அலுவலக வலைதளத்தில் தங்களின் அலைபேசி எண்ணை பதிவு செய்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் இந்த பதிவேற்றம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.