You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNEA Rank List 2023 Released | tneaonline.org | பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

Typing exam apply Tamil 2023

TNEA Rank List 2023 Released | tneaonline.org | பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

TNEA Rank List 2023 Released

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அது வெளியிட்ட அறிவிக்கை, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் 2023-2023ஆம் கல்வியாண்டில் இளங்கலை படிப்புகளில் சேர கலந்தாய்வு நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் மே 5ம் தேதி தொடங்கி ஜூன் 4ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2,29,167 விண்ணப்பங்கள் வந்தன. அதில் 1,55,124 பேர் கட்டணங்களுடன் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 20ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், பொறியில் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. மாணவர்கள் தரவரிசை பட்டியலை www.tneaonline.org. என்ற இணையதளத்தில் காணலாம். தரவரிசை பட்டியல் வெளியான பிறகு, தரவரிசை தொடர்பான புகார்கள் தெரிவிக்க ஜூன் 30ம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும்.

Read Also: பொறியியல் படிப்புக்கு எப்படி கட் ஆப் மதிப்பெண்கள் கணக்கிடுவது

தொடர்ந்து சிறப்பு கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி முதல் 5ம் தேதி வரையும், பொது கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரையும், துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும், எஸ்.சி.ஏ காலியிடம், எஸ்.சி வகுப்பிற்கான கலந்தாய்வு செப்டம்பா் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.