TNAU UG Counselling Date 2022 | வேளாண்மை பல்கலைக்கழக கலந்தாய்வு தேதி அறிவிப்பு
TNAU UG Counselling Date 2022
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு (Offline Counselling) நவம்பர் மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டில் நேரடி கலந்தாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பதிவிடப்பட்டுள்ளது.
இத்தகவல் மாணவர்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இணையதள வாயிலாகவும் மற்றும் 0422-6611345, 0422-6611346 என்ற தொலைபேசி உதவிச் சேவை எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம். பொது கலந்தாய்விற்கான தகவல்களை என்ற இணையதள முகவரியில் காணலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.