You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNAU UG Admission Notification 2024 | வேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

TNAU UG Admission Notification 2024

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் செவ்வாய்கிழமை (மே 7) முதல் தொடங்கியுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும், வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சேர்த்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட 14 இளம் அறிவியல் பாடப்பிாிவுகளும், மீனவளப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல் உள்ளிட்ட 6 இளம் அறிவியல் பாடப்பரிவுகள், 3 தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சேர்த்து இந்த மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இந்த மூன்று கல்வி நிறுவனங்களிலும் ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை பயில நினைக்கும் மாணவர்கள் ஒரேயொரு விண்ணப்பத்தை இணையவழியில் பூா்த்தி செய்து அனுப்பினால் போதுமானது.

விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினா் ரூ 600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ 300 செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை http://tnagi.ucanapply.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள், மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் என்ற www.tnau.ac.in இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். 

மாணவர்கள் வரும் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பலாம். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாணவர்கள் வார நாட்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை 94886 35077, 94864 25076 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.