TNAU UG ADMISSION COUNSELLING DATE 2023 | வேளாண் படிப்பு கலந்தாய்வு தேதி 2023
TNAU UG ADMISSION COUNSELLING DATE 2023
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2023-2024 கலந்தாய்வு தேதி அறிவிப்பு.
அதாவது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கான இணையதள வழி கலந்தாய்வு (ஆன்லைன்) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் (Certificate Verification) ஜூலை மாதம் 12ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
Read Also: வேளாண்மை பல்கலைக்கழகம் அட்மிஷன் 2023
தற்காலிக இணையதள வழி கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதிகள்
- 7.5 சதவீதம் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு இணையதள வழி கலந்தாய்வு ஜூலை 12 முதல் 14 வரை நடைபெற்றது.
- 7.5 சதவீதம் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 17ம் தேதி நடைபெறுகிறது.
- தொழிற்முறை கல்வி பாடப்பிரிவினருக்கான (வோகேஷன் ஸ்டிரீம்) இணையதள வழி கலந்தாய்வு (அ) பொதுப்பிரிவினர் மற்றும் (ஆ) 7.5 சதவீதம் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.
- தொழிற்முறை கல்வி பாடப்பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 18ம் தேதி நடக்கிறது.
- பொதுப்பிரிவினருக்கான இணையதள வழி முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 17 மற்றும் 18ம் தேதி நடைபெறுகிறது.
- பொதுப்பிரிவில் இணையதள வழி முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது.
- பொதுப்பிரிவினருக்கான நகர்வு முறை மற்றும் இணையதள வழி இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 26, 27ம் தேதிகளில் நடக்கிறது.
- பொதுப்பிரிவில் இணையதள வழி இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 28 மற்றும் 29ம் தேதிகளில் நடக்கிறது.
இணையதள வழி கலந்தாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடைய மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
மேலும் விவரங்கள் அறிய 0422-6611345, 0422-661346 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.