TNAU UG Admission Certificate Verification Date | வேளாண்மை பல்கலைக்கழகம் சான்றிதழ் சரிபார்ப்பு
TNAU UG Admission Certificate Verification Date
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கான பொது கலந்தாய்வில் கலந்து கொண்டு இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களுடைய சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை மாதம் 24 முதல் ஜூலை 27ம் தேதி வரை ஆகிய நான்கு நாட்கள் கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகு வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க - வேளாண்மை பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியல்
சான்றிதழ் சரிபார்ப்பிற்கான கால அட்டவணை http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பொது கலந்தாய்வில் கலந்துகொண்டு இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்குரிய குறுஞ்செய்தி அவர்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தி சரிபாாத்து சான்றிதழ் சரிபார்ப்பின்போது கலந்துகொள்ள வேண்டும். கலந்துகொள்ள தவறியவர்களுக்கு மறுபரிசீலனை செய்யப்படமாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.