TNAU Admission 2021 Notification | Students Can Apply From September 8
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை :
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 11 இளங்கலை பட்டப்படிப்புகள் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் மூலமாக வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான (2021-22) இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மாணவ, மாணவிகளிடம் இருந்து செப்டம்பர் 8ம் தேதி இணையதளம் மூலமாக பெறப்பட உள்ளது.

தமிழக அரசு அறிவிப்பின்படி, இந்த கல்வி ஆண்டு முதல் புதிதாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகள் தமிழிலும் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்த தமிழ் வழி படிப்புகள் கோவையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கப்பட உள்ளது.
தமிழக அரசு அறிவிப்பின்படி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமானது, நடப்பு கல்வியாண்டிலேயே மேலும் புதிதாக ஒரு தோட்டக்கலை கல்லூரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் மூன்று வேளாண்மை கல்லூரிகள் முறையே கரூர் மாவட்டத்திலும், கீழ்வேளூர், நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மற்றும் செட்டிநாடு சிவகங்கை மாவட்டத்திலும், துவங்கப்பட்டு மாணவர் சேர்க்கையும் நடைபெறும் என்று கோவை வேளாண்மை முதன்மை மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) மா கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |